பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலைப்பற்றி......

டாக்டர் தமிழண்ணல்

கவிதையில் பழகு தமிழும் அழகு நடையும் ஆற்றொழுக்கான ஓசையும் அமைந்துள்ளமைகண்டு பாராட்டுகிறேன்.

‘கிளியுடம்புத் தாமரையின் இலை’

நல்ல நிற உவமை.

‘காலடியால் காதலரை வேவு பார்க்கும்
காமன்’

நல்லதொரு கற்பனை.

‘அரைவட்டத் தாவணியை விரித்துத் தோகை
அழகுமயில் ஆடும்போது’

மயிலாட்டம் கண்ணெதிரே காட்சியளிக்கிறது.

‘ஏமாற்றக் கன்னி யானேன்
இலையுதிர் காலமானேன்’

என்பதில்தான் எத்துணை அவலம் ?

கருக்கொண்ட நிலையில் ஒரு பெண்

‘பொன்னுடல் காரி யின்று
பொருளுடல் காரி யானேன் ;
என்மடி கனத்துப் பார
இளநீர்த்தெங் காகி விட்டேன்’

என்றுரைப்பதிலே நல்லதொரு நயம் மிளிர்கிறது.