பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


சாவிலே முடியு மிந்தச்
சாத்திரத் திரும ணத்தால்
காவலும் கட்டுப் பாடும்
கடமையும் தோன்றிக் காதல்
ஆவலைக் குறைக்கும்; நெஞ்சில்
அயல்விருப் பங்கள் தோன்றும்;
தாவிடும் காத லின்பத் -
தரம்மிகக் குறைந்து போகும்.

காதலைத் தவிர வேறு
கருத்துக்கும் உணர்ச்சி கட்கும்
ஆதர வாக நெஞ்சில்
அரங்கேற்றம் செய்ய மாட்டேன்.
பூதலத் தரசி தாங்கும் -
பொன்முடி, நீங்கள் சூட்டும்
காதலிப் பட்டத் துக்குக்
கால்தூசு போன்ற தாகும்.

மதுக்குட மங்கை யென்னை
மயக்குதற் காக நீங்கள்
புதுப்புதுக் கவிதை யாரம்,
பூட்டினிர் அறைக்குள் ளேநாம்
பதுக்கிய காதல் இந்தப்
பாரீசில் அலராயிற்று.
விதைப்பழம் என்னை யாக்க
விரும்பினர்; வேற்றுார் சென்றோம்.