பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பண் மொழி! கவிஞ ரைப்போல்
படைப்பாற்றல் நமக்குத் தானே ?‘

என்னும்போது கவிஞர்களும் பெண்களும் படைப்பாற்றல் உடையவர் என்று கூறுவது மிகப் பொருத்தம்.


தமிழைப் பற்றிய அரிய கருத்து :


‘திங்கள் வாழ் மண்டி லத்தில்
தென்னாப், பிரிக்க நாட்டில்
துங்குவாழ் மலேயா சாவா
தொலைவு மோரீசில், மற்றும்
எங்குவாழ் கின்ற போதும்
இத்தமிழ்க் குலத்தைச் சேர்க்கும்
சங்கிலி தமிழே என்று
சாற்றுவாய் அன்புத் தோழி !’


டாக்டர் எழில்முதல்வன்


‘கடைதிறப்பு’ ஒருவகைவில் உணர்ச்சியின் மடை திறப்பாக இருக்கிறது. முற்றிலும் புதிய நோக்கில் அமைந்த இக்கவிதைகளைப் படித்துப் படித்து மகிழ்ந்தேன்: சொல்லாட்சிச் சிறப்பு, உவமை நலம், கூறும் முறை அனைத்தும் புதுமையே ! அண்மைக் காலத்தில் வெளிவந்துலவும் கவிதை நூல்களில் நான் படித்தவரை, கடை திறப்பு தனி இடத்தைப் பெறுகிறது.


பேராசிரியர் இ. சு. பாலசுந்தரம்


‘முருகு’ என்ற சொல்லின் பொருள்கள் முழுமையும் நூலுக்குப் பொருந்தும். எண்ணக் குழந்தைகளைக் கவிதையெழில் பொங்கப் ‘பிரசவம்’ செய்திருக்கிறீர்கள். நூலை ‘அசை’ போட்டு வருகிறேன். விரைவில் சீர் துக்கி, காமஞ் செப்பாது வாய்மையோடு ‘தளை’ செய்து