பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


இச் சரிகைக் கூந்தல் சாயல்மயில் பன்மொழி பேசும் இன்னிசைக் கின்னரம்; மயக்கும் அழகுக்கு மாதிரிப் படிமம்: கவிதை ஊறல்; நாகரிக நளினம்; பணம் படைத்த மாலைப் பிரபுவை மணந்த காலைச் செங்கதிர். அப்பாட்டு நிலாவை, பைரன் தன் கூட்டு நிலாவாக்கிக் கொண்டான். அவன் அவளுக்கு அனுப்பிய எழுத்துத் தூது இங்கு இலக்கிய வடிவம் பெற்றிருக்கிறது.

புதுமொட்டுப் பருவத்தை
பொன்னிழைத்த தொட்டிலிலே
கழித்து விட்டு
மதுமொட்டுப் பருவத்தை
மதக்கன்னி மாடத்தில்
கழித்து விட்டு
பதினெட்டுப் பருவத்தைப்
பஞ்சணையில் கழிக்கின்ற
படுக்கைப் பூவே!
மதிநட்டுக் கொலுவிருக்கும்
கழுத்தழகி நானுன்னை
மறப்ப தெங்கே!