பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


எனக்கென்றோர் எதிர்காலம்
இவ்வுலகில் இனிமேலே
இருக்கு மானால்
உனக்கன்றி வேறொருத்திக்
கொருநாளும் இடமில்லை
உறுதி யாக !
புனக்கொல்லைப் பந்தலிலே
போயேறிக் கொடிமின்னல்
படர்வ தில்லை.
இனக்கவர்ச்சி இலக்கியமே !
இனியொருத்தி மேனியில்நான்
படர மாட்டேன்.

பனிநரைத்த தலையோடு
பார்மீது படுத்திருக்கும்
முதிய ஆல்ப்சும்,
நினைந்துநினைந் திரவெல்லாம்
நெஞ்சுருக ஒலமிடும்
கடற்கைம் பெண்ணும்,
கனிமொழியே நம்மிருவர்
கட்டிலினைப் பிரித்ததுண்டு ;
கடலும் ’குன்றும்
இனிநம்மைப் பிரிக்காமல்
இருப்பதற்குத் தடைபோட
இன்றே நீவா !