பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சல் யாப்புச் செய்கிறேன் ‘அணி’ பெற்று தங்கள் கவிதையணங்கு அடுத்த தாய்மைப் பேற்றைப் பத்துத் திங்களுக்கு முன்பே அடையட்டும். அதில் எங்களுக்கு ஆவலும் அவசரமும் அதிகம். ‘பாரதி-பாரதிதாசனுக்குப் பிறகு கவிதை நூலின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கேட்டு வாங்கும் நூலாக இது இருக்கிறது’ என்று மதுரை மீனாட்சி புத்தக நிலைய உரிமையாளர் சிலிர்ப்புச் செய்தி தருகிறார்.

குயில் (பாவேந்தர் நினைவிதழ்)

கவிதையுலகில் புதுப்புது மாறுதல்கள், புரட்சி எண்ணங்கள் புதுக்கி மின்னிக் கொண்டிருக்கின்றன. தமக்கெனச் சிலர் தனியானதோர் நடையினை ஏற்படுத்திக் கவிதையுலகினைச் சிறக்கச் செய்கின்றனர். அத்தகு வரிசையிலே ‘கடை திறப்பும்’ ஒன்று. கவிஞரின் முயற்சி புது முயற்சி எனினும், புரட்சி முயற்சியாகும். புதுமை இலக்கியங்கள் தமிழில் தோன்றுவதற்குரிய வரிசையை நினைவுபடுத்துகிறது ‘கடை திறப்பு’.

முரசொலி

இதுவரை கவிதை விமரிசனம் செய்த மற்றைய கவிதை நூல்களுக்கும் இதற்கும் முற்றிலும் வேறுபாடுண்டு. ஏனைய நூல்களைப்போல் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூலன்று இந்நால். ஒப்புயர்வற்ற கருத்துச் செறிவும், கற்பனை நயமும் நிறைந்த நன்னூல் ‘கடை திறப்பு’. இதைப்போன்ற தரம் வாய்ந்த கவிதை நால்கள் சில ஆண்டுகட்கு ஒருமுறை தான் வருகின்றன. தமிழ்ப் பற்றுடையோர், இலக்கியம் வளர வேண்டு மென்று நினைப்போர் கட்டாயம் படித்து இன்புற வேண்டிய நூல் கடைதிறப்பு.