பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


குப்பையிலே கொலுவிருக்கும் கோழிச் சேவல்
கூவலுக்கு விழித்தெழுந்தேன்; என்கண் ணாளர்
மப்பில்லா வானத்து நிலாமு கத்தை
மலர்விழியால் பார்த்தபடி நின்றேன்; ஒடிக்
கொப்பரையில் காய்ந்திருந்த நீரை மொண்டு
குளித்துலந்தேன்; காதருகில் வந்தோர் தோழி
‘எப்படித்தான் இருந்ததடி புதுத்தேர் ஒட்டம் ?’
எனக்கேட்டாள்; நாணத்தால் கூனிப் போனேன்.


இளவேனில் பெண்களுக்கு மணந்தான் என்ப
தின்றறிந்தேன்; ஐந்தருவி பொங்கு மிந்தக்
குளியலினைத் தள்ளிவைக்க லாமா? கல்வி
கூடாதென் றுரைக்கவில்லை; யாழ்ப்பா ணத்துக்
கிளிப்பேச்சு மேகலையே! புத்த கத்தைக்
கிழமாகிப் போம்வரையில் சுமப்ப தற்கா
பளிங்குமலை மார்பகத்தைப் பெற்றோம்; போடி
பயித்தியமே! திருமணத்திற் கழைப்ப னுப்பு