பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


இருந்திருந் தாற்போல் ஒர்நாள்
இருமுறை வாந்தி செய்தேன்.
‘விருந்தென்றால் பெண்வ யிற்றை
விற்பவள்’ என்றார் அன்பர்.
பொருந்தாத இந்தக் கூற்றைப்
பொறுக்காத மாமி. எங்கள்
குறுந்தொடி இந்த மாதம்
குளிக்கவே இல்லை’ என்றார்.


கடல்குளித் தேறு கின்ற
கதிரவன் தோன்று முன்னால்
உடல்குளித் தவரை ஓடி
உசுப்புவேன்; ஆத லாலே
மிடல்பெற்ற தோளர், நெற்றி
மேலேற விழித்தார்; ‘இன்றைக்(கு)
உடல்தொட்டுத் தழுவும் நேரம்
உம்ஐயம் தீரும்’ என்றேன்.


மொட்டுடல் மேனி என்றன்
முதல்வரின் பழக்கத் தாலே
கட்டவிழ் மலராய் ஆனேன்;
கணங்கூட அவரை இந்நாள்
விட்டுநான் பிரிவ தற்கு
விரும்புவ தில்லை; என்னைத்
தொட்டுக்கொண் டிருங்கள் என்று
தொனுப்புவேன்; அவரும் செய்வார்.