பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(இ) பிள்ளைத் தமிழ்

பிள்ளைப் பேறு பெண்மையின் நிறைவுக்கு இயற்கை அளிக்கும் இன்பப் பரிசு. பெற்றோர் தம்மை வேறு ஓர் உருவில் கண்டு உள்ளம் பூரிக்க, உருவாக்கும் அமுதப் படிமம். உயிர்தளிர்க்கத் தீண்டி, வாழையும் குழலையும் பேச்சால் தோற்கடித்துத் தவழும் மடிநிலவு: இந்த உயிரின் மறுபதிப்பைப் பெற்றெடுத்த முல்லை, அதனால் தான் பெறும் இன்ப வருவாயை எழுத்தாக்கிக் தோழிக்கு அனுப்புகிறாள்.

படிப்புமே கலையே? காமம்
பழகாத உடுக்கை ஆடை
இடுப்புமே கலையே! காலை
ஈழத்தில் வைத்து, நெஞ்சை
வடுப்படாத் தமிழில் வைத்து
வாழ்கின்ற தமிழர்க் கிந்நாள்
விடுக்குகென் வாழ்த்தைச் சொல்லு ;
விரைவினில் மடல்தி ருப்பு.

திங்கள்வாழ் மண்டி லத்தில்,
தென்னாப் பிரிக்க நாட்டில்,
துங்குவாழ் மலேயா, சாவா,
தொலைவுமோ ரீசில், மற்றும்
எங்குவாழ் கின்றபோதும்
இத்தமிழ்க் குலத்தைச் சேர்க்கும்
சங்கிலி தமிழே என்று
சாற்றுவாய் அன்புத் தோழி !