பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90



உழுந்தொழில் உழவன் ஒர்நாள்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கப்
பழந்தமிழ்ப் புதையல் ஒன்றைப்
படைச்சாலில் பெற்ற தைப்போல்
அழுந்தொழிற் குழந்தை பெற்றேன்.
அன்னமே! சொல்லப் போனால்
குழந்தையும் புதையல் என்று
கொள்வதில் குற்ற மில்லை.

செம்மாது ளைபி ளந்த
சிறியசெல் வாயால் தோழி !
அம்மாவென் றக்கு ழந்தை
அழுதசொல் தமிழே ! இந்தத்
தைமாதம் வரைவ யிற்றில்
தங்கியே கற்ற பாடம்
அம்மா தான் போலும் ; நெஞ்சை
அள்ளுமித் தமிழ்தான் போலும்.

பிள்ளையைப் பெறுவேன் என்று
பெற்றவர் நினைத்தார் ; இந்தக்
கிள்ளையோ என்னைப் போலோர்
கிழங்கினைப் பெற்றெ டுத்தேன்.
உள்ளத்துச் சோர்வைக் காட்டி
உட்கார்ந்து கொண்டி ருந்த
வள்ளலைப் பார்த்தேன்; ‘என்ன
வருத்தமா?’ என்று கேட்டேன்.