பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90


வாழ்ந்த சிற்பக்கலை வல்லுநர்கள் தங்கள் தங்களது பேராற்றலை இவ்விடத்தில் நிலை நாட்டிச் சென்றிருக்கின்றனர். தொட்ட இடமெல்லாம் 'கலைகலை!' என்று முழக்கம் செய்கின்றன. மின்னொளி பரப்பும் அப்பன்னிறச் சலவைக் கற்களுக்கு வாயிருந்தால், ஒவ்வோர் அணுவும் ஓராயிரம் கதைகளை நம் காது குளிர எடுத்தியம்பும் என்பதில் ஐயமில்லை.

மொகலாய மன்னர்கள் படுத்துப் புரண்ட இப்பளிங்கு மாளிகை, கலைத் தேவியின் அழகுத்தொட்டில் ; அழகுக்கலை பதுக்கி வைக்கப்பட்ட அலங்காரப் பெட்டகம் ; மனிதன் வளர்த்த கலை நாகரிகத்தின் உச்ச வரம்பு. இவ்விடமே டில்லியில் பரந்து காணப்படும் மொகலாயக் கட்டடக் கலையின் மூல நாடி. இவ்விடத்தில் மன்னர் அமர்ந்து உரையாடுவதற்கென்று ஒரு முன் அறை (Drawing room) உள்ளது. இதில் மொகலாய மன்னர்களின் நீதியின் சின்னமான துலாக்கோல் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. மன்னர் நண்பர்களோடு உரையாடுவதும், பொதுமக்களுக்குக் காட்சி கொடுப்பதும் இவ்விடத்தில் தான் ; இவ்வறைக்கு எதிரிலுள்ள திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி நிற்பர். மன்னர் நாளுக்கு ஒரு முறை இவ்விடத்தில் அமர்ந்து அவர்கட்குக் காட்சி கொடுப்பார்.

திவானீ காசிற்கு இடப் புறத்தில் அரச குடும்பத்தினர் நீராடும் வாவிகளும், குளியல் அறைகளும் உள்ளன. இதைப் போன்ற குளிக்கும் கட்டத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது. இங்குள்ள நீர் வாவி ஒன்றில் பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்ட மாபெரும் தாமரைப்பூ ஒன்றுள்-