பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95 துள்ளது. வாத்திகன்’ என்னும் சொல்லுக்குக் கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்தியைப் பரப்பும் இடம் என்பது பொருள். இயேசு பெருமானுக்குப் பிறகு, அவருடைய சமயக் கொள்கைகளைப் பரப்பச் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் செயின்ட் பீட்டர் என்பார். இவரைத் துய இராயப்பர் என்றும் வழங்குவர். இயேசு பெருமானுக்குப் பின் இவரே கிறித்தவ சமயத்தின் தலைவரானர். ... "பீட்டரும், இவருக்குப் பின்வரும் போப் பாண்டவர்களும் நேர்மை உள்ளத்தோடு இறை வனுக்குத் தொண்டு செய்கிறவர்கள் ; இவர்கள் பால் எவ்விதக் குற்றமும் இடம்பெருது’’ என்று இயேசு பெருமான் திருவாய் மலர்ந்தருளினர். இவ்வாறு இயேசு பெருமானின் நல்லாசியைப் பெற்ற புனித பீட்டர், தாம் தலைமைப் பொறுப் பேற்ற கத்தோலிக்கத் திருச் சபையின் தலைமைப் பீடத்தை உரோமாபுரியில் அமைத்துக் கொண்டு பணிபுரிந்தார். புனித பீட்டருக்குப்பின் இலைனசு என்பார் சமயத் தலைவரானர். இவரும் இவருக்குப் பின் சமயத் தலைவராக வந்த போப்பாண்டவர் களும், உரோமாபுரியையே தங்கள் தலைமைப் பீட மாகக் கொண்டனர். அன்றையைநாள் தொட்டு இன்றுவரை போப்பாண்டவர்கள் தங்கிச் சமயப் பணி புரியும் இடமே வாத்திகன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கி. பி. மூன்ரும் நூற்றண்டு முதல் எட்டாம் நூற்ருண்டுவரை கிறித்தவ சமயம் செழித்துப்