பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


97 களையும், வர்ஜில் போன்ற மாகவிஞர்களையும் உலகிற்கு நல்கிய பெருமையும் இந்நகருக்கு உண்டு. ஏறத்தாழ 1500 ஆண்டுகள் உலகைக் கட்டியாண்ட உரோமப் பேரரசின் வரலாற்றுச் சின் னங்கள் யாவும் இந்நகரில் குவிந்து கிடக்கின்றன. எனவே உலகில் வேறு எந்த நகரிலும் கூடாத அளவு பெருந்திரளான மக்கள் இந்நகரைக் காண நாள்தோறும் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர். இந்நகரில் பயணிகளின் வசதிக்கென நூற்றுக் கணக்கான விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு விடுதி யிலும் இரண்டு மணிக்கொருமுறை பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்துகள் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகின்றன. உரோமாபுரி நகரில் பார்க்கத்தக்க இடங்களில் குறிப்பிடத்தக்கவை வாத்திகனில் உள்ள போப்பாண்டவர் மாளிகை யும், புனித பீட்டர் தேவாலயமும்தாம். வாத்திகன் மாளிகை உலகிலேயே மிகப் பழமையான கட்டடம் வாத்திகன் மாளிகைதான். இம்மாளிகை எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்று திட்டவட்ட மாகக் கூற முடியவில்லை. கி. பி. ஐந்தாம் நூற்ருண் டில் பேரரசர் சிலரால் இம்மாளிகை கட்டப்பட் டிருக்க வேண்டும். இம்மாளிகை போப்பாண்டவர் வாழும் இடம் மட்டுமன்று; உலகிலுள்ள கத்தோ லிக்கச் சமயத்தினரின் தலைமை அலுவலகமும் ஆகும். போப்பாண்டவரின் அமைச்சர்களும், அலுவலர்களும், நூற்றுக்கணக்கான துறவிகளும் 7 - -