பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 இம்மாளிகையிலேயே வாழ்கின்றனர். வாத்திகன் நகரின் மொத்தக் குடிமக்கள் ஆயிரம் பேர். வாத்திகன் மாளிகை மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கட்டடம். இதன் சுவர்களின் அகலம் 4 மீட்டர். ஆயிரக் கணக்கான தூண்களும், ஒரா யிரம் அறைகளும் இதில் உள்ளன. நூறு இடங் களில் மாடிப்படிகள் அமைந்துள்ளன. இருநூறு அறைகளில் போப்பாண்டவரும், அவருடைய உயர் அலுவலர்களும் பணியாட்களும் வாழு கின்றனர். வாத்திகன் மாளிகையில் போப்பாண்டவர் தங்கி வாழும் அறை மிகவும் அழகானது. பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இவ்வறை கண்ணேப் பறிக் கும் கலையழகு வாய்ந்தது. இவ்வறையின் நடுவில் போப்பாண்டவர் அமர்வதற் கென்று அமைக்கப் பட்ட சிம்மாசனம் உள்ளது. இது பொன்னலானது. இச் சிம்மாசனத்திற்கு அருகில் போப்பாண்டவர் பயன்படுத்தும் தங்கத்தாலான தொலை பேசி வைக்கப்பட்டுள்ளது. போப்பாண்டவர் தம் துயில் நீங்கிப் படுக்கையை விட்டு எழுந்ததும், புனித பீட்டர் தேவாலயம் அவர் கண்ணில் நேராகப் படும்படி அவ்வறை அமைக்கப்பட்டுள்ளது. போப்பாண்டவரின் குளிக்கும் அறையில் பல வித நூதனப் பொறிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவ்வறையில் உள்ள நீராடும் அமைப்புக்கள் கலைச் சிறப்புடன் கூடியவை. சுவரில் பொருத்தப் பட்டுள்ள விசையைத் தட்டி விட்டதும் இக் கருவிகள் இயங்கத் தொடங்கும். மின்விசையின்