பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


99 துணையால் இயங்கும் முகம் மழிக்கும் கருவிகளும் (Shaving set) குளியல் அறையில் உள்ளன. பன்னாட்டு மக்களால் பரிசளிக்கப்பட்ட அக் கருவி கள் யாவும் பொன்னல் ஆனவையே. வாத்திகன் மாளிகையைக் குளிர் காலங்களில் சூடாக்குவதற்காகவும் சில அமைப்புகள் பொருத் தப்பட்டிருக்கின்றன. இவ் வ ைம ப் பு க் களி ல் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், போப்பாண் டவர் இருக்கிற அறையைச் சூடாக்குவதற்குத் தனியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புனித பீட்டர் ஆலயம் தில்லையிலுள்ள நடராசப் பெருமான் கோவிலே நாம் அறிவோம். அங்கு ஆனந்தக் கூத்தாடும் இறைவனுக்குப் பொன்னம்பலவன் என்றும், அவன் காலைத் துாக்கி ஆடும் மேடைக்குப் பொன்னம்பலம் என்றும் பெயர்களுண்டு. தில்லை நடராசன் கோவில் கொண்டிருக்கும் கருவறை பொன்ைேடுகளால் வேயப் பெற்றது. தில்லைக் கோவிலுக்குப் பொன் வேய்ந்த பெருமை பிற்காலச் சோழர்களேயே சாரும். இதே போல வாத்திகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தின் மேல் முகடு பொன் தகடு கள் பதித்து மெருகிடப் பட்டுள்ளது. இயேசு நாத ருக்குப் பிறகு கிறித்தவ சமயத்தலைவரான புனித பீட்டரின் நினைவாகக் கட்டப்பட்டதே இத் தேவா லயம். புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண் மையில் இவருடைய சமாதியைக் கண்டறிந்து பல அரிய உண்மைகளை வெளிப்படுத்தினர்.