பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. தோற் றுவாய் "விண்மறைக்கும் கோபுரங்கள் வினைமறைக்கும் கோயில்கள் வேறு எந்த நாட்டில் உண்டு வேலையின் விசித்திரம்!” என்று மெய்ம்மறந்து பாடுகிறர் நாமக்கல் கவிஞர். தமிழன் பெருமையோடு தலை நிமிர்ந்து நிற்பதற்கு நம் நாட்டின் கட்டடக் கலையும் ஒரு காரணமாகும். திரும்பிய பக்கமெல்லாம் மலை போன்ற பெருங்கற் கோவில்களையும், சிற்பக் கஜல. யழகு கொழிக்கும் குகைக் கோவில்களையும் தமிழக மெங்கும் காணலாம். இவை யாவும் பண்டைத் தமிழர் கட்டடக் கலையில் அடைந்திருந்த மேம் பாட்டிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாம். மாந்தன் ஆறறிவு படைத்தவன் சிந்திக்கக் கற்றவன். ஆலுைம் அவன் நாகரிகத்தின் துவக்க வளர்ச்சி, பின்பற்றும் ஊக்கத்தாலேயே (imitaion) ஏற்பட்டுள்ளது. மாந்தனின் கட்டடக்கலை யுணர்வுக்கு முதற் காரணமாக அமைந்தவை பறவைகளும் விலங்குகளுமேயாம். தென்னங் கீற்றில் ஊஞ்சலாடும் தூக்கணங்குருவியின் கூடும்,