பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


100 இக்கோவில் கி. பி. நான்காம் நூற்றண்டில், உரோமானியப் பேரரசராக விளங்கிய கான்ஸ்டன் டைன் (Constantine) என்பவரால் கட்டப்பட்டது. மிகவும் தொன்மையான கிறித்தவக் கட்டடக் கலைக்கு இக் கோவிலே சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கியது. கி. பி. பதின்ைகாம் நூற்ருண்டின் இறுதி வரையில் மேலே நாட்டுக் கிறித்தவர்களுக்கு இதுவே தலைசிறந்த தேவாலயமாகக் கருதப் பட்டது. கி. பி. பதினைந்தாம் நூற்ருண்டில் ஏற். பட்ட மறுமலர்ச்சியினல் மக்கள் உள்ளத்திலும், கலை உலகிலும் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தன. எனவே புனித பீட்டர் தேவாலயத்தைக் காலத் திற்கேற்ப மாற்றிப் புதுப்பிக்க விரும்பினர். தேவாலயத்தைப் புதுக்கும் திருப்பணி கி. பி. 1506 ஆம் ஆண்டு துவங்கியது. இவ்வாண்டில் துவங்கிய திருப்பணி 120 ஆண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது. இக் கோவிற் புதுக்குத் திருப்பணி முதன் முதலாக, பிராமண்டி என்ற ஒரு சிற்பியின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவர் கோவிலின் ஒரு பகுதியை விரிவு படுத்தினர். எட்டாண்டுகள் அவர் பணி தொடர்ந்தது. கி. பி. 1514 ஆம் ஆண்டு அவர் இறந்ததும் கோவில் திருப்பணி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றது;முப்பது ஆண்டு கள் கழித்து மீண்டும் தொடர்ந்தது. இம் முறை கட்டட வேலையின் பொறுப்பை மேற் கொண்டவர் மைக்கேல் ஆஞ்சலோ என்ற மாபெரும் சிற்பி. மேலை நாட்டுச் சிற்பக் கலையின் மறுமலர்ச்சிக்குக் காரண மாக விளங்கியவர் இவரே. இவர் விரிவான திட்டி மிட்டுப் பீட்டர் தேவாலயத்தைப் பெரிதாக