பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 வரின் மாளிகையிலும், புனித பீட்டர் கோவிலிலும் இக்கலைச் செல்வங்கள் யாவும் தொகுக்கப் பெற்றுக் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. கிரேக்க நாட்டுக் கலைச்செல்வங்களே இங்கு ஏராள மாக உள்ளன. இக்கோவிலில் வண்ண வ8ளவுகளும், பகுதி பகுதிகளாக அமைக்கப்பட்ட மண்டபங்களும், நயமான செதுக்கு வேலையுடன் கூடிய உயர்ந்த துரண்களும் நிறைய உள்ளன. கிரேக்கர்களின் அரிய படைப்புக்களான மனித உருவப் படங்களும், வெள்ளைப் பளிங்கிலும் வண்ணப் பளிங்கிலும் தீட்டப்பட்ட உயிரினங்களின் வடிவங்களும், இராஃபியேல் போன்ற இத்தாலிய மேதைகளால் தீட்டப்பெற்ற 463 ஓவியங்களும் நம்மை வியப்பி லாழ்த்தும் கலைப்பொருள்களாக உள்ளன. 5 மீட்டர் உயரமுள்ள பளிங்குச் சிலைகள் பலவற்றை இங்குக் காணலாம். வாத்திகன் நகரத்தைச் சில மணித் துளிகளில் நடந்து கடந்து விடலாம். ஆனல் இங்குள்ள கலைச் செல்வங்களைக் கண்டு மகிழப் பல்லாண்டுகள் வேண்டும்.