பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. இறுவாய் மக்கள் நாகரிகம் பெறத் தொடங்கிய காலந் தொட்டு ஒவ்வொரு நாட்டிலும் சிறிதும் பெரிது மாகிய எத்தனையோ கட்டடங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மக்களின் கலையறிவு வளர வளரக் கட்டடக் கலையும் நுட்பமும் புதுமையும் பெற்று வளர்ந்து வருகின்றது. புதுமை என்பது மக்கள்பால் படிந்திருக்கும் இயல்பூக்கங்களில் தலையாய ஒன்று. நாள்தோறும் மாந்தர்கள் புது மையை நாடி அலைகின்றனர். புதுமையின்பால் அவன் கொண்டிருக்கும் ஆருக் காதல்தான் ஆராய்ச்சியாக மாறி, இன்று அறிவியலாக வளர்ந் திருக்கிறது. நேற்றைய பொருள் இன்று நமக்குப் பழமையாகப் படுகிறது. இப்புதுமை விருப்பம் மக்களின் கலையுணர்வை யும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இம்மாறுதலுக் கேற்ப நூற்ருண்டு தோறும் கட்டடக்கலை மாறு பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் இக்கலை பல தனித் தன்மைகளையும், சிறப்புக்களையும் பெற்று விளங்கு கின்றது. கிரேக்கக் கட்டடக் கலை, உரோமானியக் கட்டடக் கலை, பாரசீகக் கட்டடக் கலை, இந்தியக் கட்டடக் கலை, தமிழர் கட்டடக்கலை எனப் பல துறைக் கலைகள் உலகில் பிரித்துப் பேசப்படுவத ல்ை இவ்வுண்மை விளங்கும். இக்கால இந்திய மக்களின் கலைச்சுவை பண்டைச் சுவையினின்றும் முற்றிலும் மாறி