பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


106 விட்டது. சில நூற்ருண்டுகளுக்கு முன் இந்தியர் களாலும், இசுலாமியர்களாலும் பேணி வளர்க்கப் பட்ட கட்டடக் கலை, இன்று காட்சிக்கும் பாராட்டு தலுக்கும் உரிய பழங்கலையாக மாறிவிட்டது. பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்ட சிற்பக். கலையழகோடு கூடிய கட்டடங்கள் இன்று கட்டப் படுவதில்லை. சிற்பக்கலையும் இன்று வலிமை குன்றி: நசித்துவிட்டது. இருபதாம் நூற்றண்டின் ஓவியக் கலையை எண்ணும்போது நமக்குப் பெருங் குழப்ப மும் வியப்பும் ஏற்படுகின்றன. இன்றைய கலைப் பிரியர்கள் ஒவியனின் ஆற்றலுக்கு முதலிடம் அளிக்கின்றர்களே ஒழிய, எழுதப்படும் கலை இயற். கையை ஒட்டியதாக அமைந்திருக்க வேண்டும் என்று கருதுவதில்லை. இன்றைய மறுமலர்ச்சி ஒவியர்களின் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளும், அவர்கள் தீட்டிய ஓவியங்களும் செய்தித் தாள்களில் அடிக் கடி வெளிவருகின்றன. அவ்வோவியங்கள் யாவும் மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக உள்ள பல நேர் கோடுகளாகவும், வளைவுக் கோடுகளாகவுமே. காணப்படுகின்றன. உடைந்துபோன வண்ணக். கண்ணுடிப் பலகைபோல் அவைகள் காட்சியளிக். கின்றன. தெளிவான உருவம் எதையும் அவற்றில் காண முடியாது. ஆல்ை அவற்றை உயர்ந்த ஒவியங்கள் என்று உலக மக்கள் பாராட்டுகின்ற னர் ; பரிசு வழங்குகின்றனர். இன்றைய மக்களின் கலைச்சுவை அவ்வாறு மாறிவிட்டது. சென்ற நூற்ருண்டு வரை இந்திய நாட்டில் 9GGIbr#Gå sLLLṁisGer (Symmetrical buildings)