பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108 குறுக்கே இரும்புக் கம்பிகளை வைத்து வலுப்படுத் தப்பட்ட காங்கிரீட்டு செய்கிருர்கள். காங்கிரீட்டு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கட்டடக் கலையில் வியக்கத்தக்க மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. g|Tsiur HiriiiSjid SLLLLälssir (Column frammed structures): மேற் கூரையின் பளுவைத் தூண் கள் பகிர்ந்து கொள்ளுதலே இக்கட்டடத்தின் சிறப்பியல்பாகும். மதுரைத் திருமலை நாயக்கர் மகாலும், சிதம்பரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டப மும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஆல்ை இவ்விரு கட்டடங்களிலும் நாட்டப் பட்டுள்ள பெரும் பெரும் துTண்கள் இடத்தைப் பெரிதும் அடைத்துக் கொண்டிருக்கின்றன. வலுப் படுத்தப் பட்டுள்ள காங்கிரீட்டு கண்டு பிடிக்கப் பட்ட பிறகு துண் தாங்கும் கட்டடங்கள் மிகவும் பிரபலமடையத் தொடங்கி யிருக்கின்றன. வலுப் படுத்தப்பட்ட காங்கிரீட்டுகளைக் கொண்டு சிறிய துரண்களை அமைத்து, எங்கெங்கு மறைப்புச் சுவர் கள் தேவையோ அங்கெல்லாம் மிகவும் அகலக் குறைவான சுவர்களைக் கட்டிவிடுகிருர்கள். பல பெரிய கடைகள், தொழிற்சாலைகள் முதலியன அமைப்பதற்கு இக்கட்டட முறை பெரிதும் பயன் படுகின்றது. பிரித்தமைக்கும் கட்டடங்கள் (Collapsible buildings): இக்கட்டடங்கள் மேலை நாடுகளில் நடுத்தர வகுப்பினராலும், அலுவலகங்களில் வேலை செய்வோராலும் பெரிதும் விரும்பப் படுகின் றன. இக்கட்டடங்கள் பல மூலைத்துாண்களாலும்,