பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 விட்டின் உட்பரப்பு மிகுந்து காணப்படும். புதிய முறையில் கட்டப்படும் வீடுகளில் வெளிச்சுவர் கள் கனமானவையாகவும், உட்சுவர்கள் ஒன்பது அங்குல கனத்திற்கு மிகாமலும் கட்டப்படுகின்றன. கூரையின் பளுவை வெளிச்சுவர்களே தாங்கிக் கொள்கின்றன. பண்டைக் காலத்தில் செல்வர்கள் மிகப் பரந்த பல அடுக்கு மாடிகளையுடைய மாளிகைகளையே பெரிதும் விரும்பினர். இன்று நிலைமை மாறிவிட் டது. சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ என்ற பழ மொழியை வாழ்க்கையில் கடைப் பிடிக்கத் தொடங்கி விட்டனர். வீட்டைச் சிறியதாகக் கட்டிச் சுற்றிலும் திறந்த வெளிகள் இருக்கும்படி விட்டுச் சுற்றுச்சுவர் எழுப்புகின்றனர். அத்திறந்த வெளியில் இளமரங்களையும், அழகிய பூச்செடிகளை யும் பயிரிட்டு வீட்டைக் கலையழகோடு வைத்துக் கொள்ளப் பெரிதும் விரும்புகின்றனர். வீட்டோடு வீட்டை ஒட்டிக் கட்டுவது வாழ்க்கை நலத்திற்கு ஏற்றதல்ல என்று மக்கள் உணருகிருர்கள். சுரங்கக் கழிநீர்ப் பாதைகள் சுற்றுப்புறத் துய் மைக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. susirsmurģ5 #56T6usoudůų (Mossaic flooring) : பண்டைக் காலத்தில் அரசர்களும் செல்வர்களும் அழகானதும் வழவழப்பானதுமான பளிங்குக் கற் களைத் தமது மாளிகைகளில் பதித்துத் தளம் அமைத்தனர்.இக்கற்கள் மிகவும் விலையுயர்ந்தவை. ஆனல் இக்காலத்திலோ வெள்ளைச் சிமெண்டு, மணல், கண்ணுடிக் கற்கள் ஆகியவற்றைப் பயன்