பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


காணமுடியாது. எனவே தமிழகக் கட்டடக் கலையை அவைகளினின்றும் வேறுபடுத்தி வேறு பெயர் கொடுத்து வழங்குகின்றனர்.

தக்கணத்தில் உள்ள அஜந்தாச் சிற்பங்களும், எல்லோராக் குகைக் கோவில்களும் குறிப்பிடத் தக்கவை. இவை முறையே சாளுக்கியர்களாலும், இராட்டிரகூடர்களாலும் உருவாக்கப்பட்டவை. தில்லி, ஆக்ரா, பதேபூர்சிக்ரி, தௌலதாபாத் ஆகிய இடங்களில் காணப்படும் கோட்டைகளும், மசூதிகளும், மாளிகைகளும், சமாதிகளும் இசுலாமியக் கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

இந்திய நாட்டில் மட்டுமன்றி, உலகில் வேறு பகுதிகளிலும் கட்டடக் கலை சிறப்புற்று ஓங்கியுள்ளது. எகிப்து நாட்டுக் கட்டடக்கலை தமிழ்நாட்டுக் கட்டடக் கலைக்குக் காலத்தால் முற்பட்டது. அங்குக் காணப்படும் பிரமிடுகளின் அமைப்பு உலக விந்தைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய கலைக்கோவிலைப் பற்றியும், உலகத்தின் மிகப் பழைய சின்னங்களான பிரமிடுகளைப் பற்றியும், இந்திய நாட்டின் பெருமைக்கு நிலைக்களனாக விளங்கும் பளிங்கு மாளிகையாம் தாஜ்மகாலைப் பற்றியும், போப் ஆண்டவரின் வாத்திகன் மாளிகையைப் பற்றியும் இந்நூலின்கண் விளக்கிக் கூறியிருக்கிறேன். இனிக் கதை தொடரும்.