பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9 இவன் அரியணையேறியதும் முதன் முதல்ாகப் பாண்டியரையும், சேரரையும் வென்ருன்; பிறகு குடகு நாட்டையும், மைசூரின் ஒரு பகுதியான கங்கபாடியையும் வென்ருன் ; பல்லவர்களே வென்று நுளம்பபாடியைக் கைப்பற்றின்ை ; தெலுங்க நாட்டையும், கீழைச் சாளுக்கிய நாட் டையும், கலிங்க நாட்டையும் வென்று கைப்பற்றிக் கொண்டான், ஈழநாட்டின் வடபகுதியைக் கப்பற் படையின் துணைகொண்டு வெற்றிகண்டான்; * பழந்தீவு பன்னீராயிரம் ’ என்று பண்டைக் காலத் தில் குறிப்பிடப்பட்ட மாலத்தீவுகளையும் வென்ருன். இவ்வாறு அரிய பல வெற்றிகளைப் பெற்ற இராச ராச சோழன், தன் பெயர் என்றும் நிலைத்து நிற்பதற் காகத் தன் பெயரால் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினன். அது இராசராசேச்சுரம்' என்ற பெய ரைத் தாங்க்., இன்றும் அவன் புகழைப் பறை சாற்றிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது. இராசராசன் தஞ்சைப் பெருங் கோவிலைக் கட்டியதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. அவன் கலைப்பிரியன். எனவே சிறந்த கலைக்கோவில் ஒன்றைக் கட்ட விரும்பின்ை. மற்ருெரு சிறந்த காரணம், அவன் சைவ சமயத்தின்பால் கொண் டிருந்த அளவு கடந்த பற்ருகும். சோழர்கள் தில்லை யிலுள்ள சிவன் கோவிலுக்குத் திருப்பணி புரிவ தைக் கடமையாகக் கொண்டிருந்தனர். இவனும் அப் பணிகளைக் குறைவறச் செய்தான். இருந் தாலும் , தன் தலைநகராகிய தஞ்சாவூரில், தில்லைக் கூத்தப் பெருமானின் கோவிலைப்போன்று சிறந்த