பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 அவள் சிவபக்தியைப் பற்றியும் அரசனிடம் எடுத் துக் கூறி விளக்கினர். உடனே அரசன் அக் கிழவியை அழைத்து விசாரித்தான். பிரமரந்திர தளத்தில் அமைப்பதற்கு ஏற்ற அளவுடைய ஒரு கல் தன் வீட்டு முற்றத்தில் கிடப்பதாக அக்கிழவி சொன்னுள். அரசன் தன் ஆட்களையும் யானை களையும் அனுப்பி அக்கல்லைக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டான். தஞ்சாவூர் மாவட்டக் கழகப் பனகல் கட்டடத் திற்கு அருகில் அழகி குளம்’, ‘அழகி தோட்டம் ” என்ற குளமும் தோட்டமும் உள்ளன. இவற்றை இராசராசன் அக்கிழவிக்குத் தீர்வையின்றிப் பதிவு செய்து கொடுத்தான் என்ற வரலாறு ஒன்று வழங்குகிறது. இதைப்பற்றிக் கூறப்படும் வேருெரு கதையும் உள்ளது. கோபுர வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, அழகி என்ற ஒரு கிழவி நீரும் உணவும் சிற்பிகளுக்குக் கொடுத்து உதவி செய்தாளாம். அவளுடைய பணிவிடை யைப் பாராட்டக் கருதிய சிற்பிகள், அவள் வீட்டில் கிடந்த ஒரு கல்லேக் கொண்டுவந்து பிரமரந்திர தளத்தில் பொருத்தினர்கள் என்றும் கூறப்படு கிறது. இதைப்பற்றி வழங்கும் மூன்ருவது கதை பின்வருமாறு: இக்கல்லை ஓர் இடையர் குலப்பெண் கொடுத்து உதவினுள். அவளுடைய சிவ பக்தியை வியந்த அரசன் அவளுடைய ஊரில் இராசராசேச்சுரம் என்ற பெயரால் ஒரு சிவன் கோவிலேக் கட்டினன். அக்கோவில் நாளடைவில் தாராசுரம் என்ற