பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15 பெயர் மாற்றத்தைப் பெற்றது. கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்ற சிற்றுார் உள்ளது. அதுவே இந்த இடைச்சியின் ஊர் என்று கூறப் படுகிறது. எப்படியோ பிரமரந்திரக்கல் கிடைத்தது. இக்காலத்தில் இருப்பது போன்ற பாரந்துாக்கி கள் அக்காலத்தில் இல்லை. பிரமரந்திர தளக் கல் லின் எடை ஏறத்தாழ 81; மெட்ரிக் டன். அவ்வளவு பளுவான ஒரு கல்லைக் கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்வதென்பது எளிதான செயலா? இப்போது தஞ்சாவூருக் கருகில் சாரப்பள்ளம் என்ற ஓர் ஊர் உள்ளது. அவ்விடத்திலிருந்து மண்ணைக் கொட்டிப் பல மீட்டர் தொலைவிலுள்ள ஒரு சார மேட்டை அமைத்தனர். யானைகள் அக்கல்லே உருளைகளின்மேல் வைத்து உருட்டிச் சாரப்பள்ளம் வரை கொண்டுவந்து சேர்த்தன. பிறகு சில யானைகள் முன்னிருந்து இழுத்தன ; சில யானைகள் பின்னிருந்து மேலே உந்தித் தள்ளின. சாரத்தின் மேல், கல் மெதுவாக ஏறிக் கோபுர உச்சியை அடைந்தது. சிற்பிகள் பிரமரந்திர தளக்கல்லின் மீது அரைக்கோள வடிவமான கல் கட்டுமானம் அமைத்தனர். அதற்குத் தூபித்தறி என்பது பெயர். அதன்மீது வைக்கப்பட்டுள்ள செப்புக் குடத்தின் நிறை சுமார் 108 கி. கிராம் ஆகும். அதன்மீது தங்கத்தில்ை ஆன தகடு போர்த்தப்பட்டு உள்ளது. இக்கோவில் விமானம் தக்கண மேரு எனப்படும். இதன் நான்கு மூலைகளிலும் முறையே இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. அவை