பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 தனித்தனி ஏறத்தாழ 2 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டவை. இக்கோவிலின் கருவறையில் அமைக்கப்பட் . டிருக்கும் சிவலிங்கம் மிகவும் உயரமானது. இதனை நருமதை ஆற்றின் கரையில் உள்ள கரும்பாறை யில் செதுக்கிக்கொண்டு வந்தனர் என்று கூறுவர். சிவலிங்கத்திற்கு எதிரே தனியாகக் கட்டப் பட்டுள்ள மண்டபம் ஒன்றில் சிற்பி, சிவபெரு மானின் ஊர்தியாகிய நந்தியை ஒரே கல்லில் அமைத்து வைத்தான். இதன் உயரம், முன்பக்கத் தில் பீடத்திலிருந்து தலை வரை சுமார் 32 மீட்டர் எனவும், அதன் பின்பாகத்தின் உயரம் சுமார் 24 மீட்டர் எனவும், நடுவில் பீடத்திலிருந்து முகப்பு வரை சுமார் 315 மீட்டர் எனவும், அதன் மூக்குநுனிமுதல் பின்பாகம்வரை சுமார் 487 மீட்டர் நீளம் எனவும், முதுகின் குறுக்களவு சுமார் 2-13 மீட்டர் எனவும் தொல்பொருளாராய்ச்சி வல்லார் கணக்கிட்டுக் குறித்திருக்கின்றனர். இந்நந்தியைத் தஞ்சைக்கு 640 கி.மீட்டர் தொலைவிற்கப்பாலிருந்து கருங்கல்லில் செதுக்கிக் கொண்டு வந்தனர் என்றும் கூறுகின்றனர். கருவறையில் உள்ள சிவ லிங்கத்தின் உயரமும், நந்தியின் உயரமும் ஒரே அளவு எனவும், இரண்டும் சம மட்டத்தில் இருப் பவை எனவும் கூறுகின்றனர். தஞ்சைக் கோவிலின் திருப்பணி நடைபெற்ற காலத்தில் இராசராசன் நாள் தோறும் சிற்பிகளின் வேலையை மேற்பார்வையிட வருவது வழக்கம். சில நேரங்களில் சிற்பிகளின்மீது வெயில் படாத