பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 கோளுக்கு இசைந்து, அவர் தஞ்சைக்கு எழுந் தருளினர். தம்முடைய வாயிலிருந்த தம்பலத்தை ம்ருந்தாகப் பயன்படுத்தி இலிங்கத்தைக் கருவறை யில் பொருத்தினர் தேவர். வியக்கத்தக்க முறையில் உருக்கி வார்த்தாற் போல் அது பொருந்தியது. தஞ்சைப் பெரிய கோவில் இந்திய நாட்டி லேயே தலைசிறந்த கோவில் என்று பிரித்தானியக் &%οά&6Tójáu I5ITô (Encyclopaedia Brittanica) கூறுகிறது. இக்கோவில் தஞ்சையின் நடுவிலுள்ள சிவகங்கைச் சிறு கோட்டையின் தென் பாதியில் அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றி ஆழமான ಕ್ಲೌ ஒன்று அமைந்துள்ளது. கோவிலுக்குள் செல்பவர்கள் அகழி மேலுள்ள பாலத்தைக்கடந்து கோட்டைச் சுவரிலுள்ள வளைவுக்குள் நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். அகழியைக் கடந்த தும் அழகிய கோபுரம் ஒன்று தென்படும். அதைக் கடந்து உள்ளே சென்ருல் அகன்ற கோபுரம் தென் படும். பிறகு ஏறத்தாழ 152 மீட்டர் நீளமும் 764 மீட்டர் அகலமும் உடைய பெரு மன்றம் உள்ளது. அதன் எதிரில் அமைந்துள்ள பீடத்தின் மேல் மிகப் பெரிய நந்தி படுத்திருக்கிறது. தமிழகத் திலுள்ள வேறு எந்தக் கோவிலிலும் இவ்வளவு பெரிய நந்தியைக் காண முடியாது. இதன் கலை யழகு கண்ணேக் கவரும் தன்மையது. உயிருள்ள காரெருது ஒன்று இளேப்பாறுவதற்காகப் படுத் திருப்பது போல் இது தென்படும். நாக்கை வெளி யில் நீட்டி வளைத்து, மூக்கிற்குள் செலுத்தியிருக்கும் சிற்ப நயத்தை வியவாதார் எவரும் இருக்க முடி