பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 கோபுரத்தின் மேற்குப் பக்கத்து மதிலில் இலிங் கோற்பவர், அர்த்த நாரீச்சுவரர் உருவங்கள் அழகாக வடித்து வைக்கப் பட்டிருக கின்றன. வடபுறத்தில் கங்காதரர், கலியான சுந்தரர், மகிடாசுரமர்த்தனி ஆகியோரின் உருவங் கள் செதுக்கப்பட்டுள்ளன. திருச் சுற்று மண்டபத்தின் தென் பக்கத்தைத் தவிர மற்றைய பகுதிகளில் மகாலிங்கங்களும், நாக கன்னிகைகளின் பதுமைகளும், அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோ ரின் சிலைகளும் அழகுடன் காட்சியளிக்கக் காண லாம். தென்பக்கத்திலுள்ள விக்கிரமன் வாயிலில் பெளத்த சிலைகள் தென்படுகின்றன. இச்சிலைகள், இராசராசன் சமயப் பொது நோக்கிற்கு மற்ருெரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் ஓர் ஐரோப் பியனின் உருவம் காணப்படுகிறது. இராசராசன் காலத்தில் யவனர், அராபியர் போன்ற வெளிநாட்டு வணிகர்கள் வாழ்ந்தார்களல்லவா? அவர்களில் ஒருவனுடைய உருவமாக இது இருக்கலாம் என்று: கருதுகிருர்கள். இச்சில இராசராசர் காலத்தில் வடிக்கப்படவில்லை; மராட்டிய மன்னர்களின் காலத் தில் அமைக்கப்பட்டது என்று சிலர் கூறுகிருர்கள். *பதினேழாம் நூற்ருண்டில் தஞ்சை இரகுநாதநாயக் கர் சபையில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவனை ரோலண்டு கிரேப் என்ற பிரித்தானிய னின் வடிவமே இது என்றும் சில்ர் கூறுகிருர்கள். "பதின்மூன்ரும் நூற்றண்டில் தமிழகத்தில் சுற்றுப்