பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


மூர்த்தியின் வாழ்க்கையைக் குறிப்பிடுகின்றன. சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் முதியவர் வேடந்தாங்கி வந்து, திருமணத்தின்போது தடுத்தாட் கொண்ட நிகழ்ச்சியையும், வேதியர் அவையில் அவ்விருவரும் வழக்குரைத்த நிகழ்ச்சியையும், சுந்தரர் வெள்ளை யானையின்மீது ஏறிக் கைலாயம் செல்லும் நிகழ்ச்சியையும், அவர் பிரிவைப் பொறுக்க முடியாத சேரமான் பெருமாள் நாயனர் குதிரைமீது ஏறி அவருக்கு முன் கயிலையை அடைந்த நிகழ்ச்சியையும் இந்த ஒவியங்கள்யாவும் அழகாக விளக்குகின்றன.

வேறோர் இடத்தில் இல்வாழ்க்கையை இனிது விளக்கும் ஓவியங்கள் உள்ளன. பல பெண்கள் சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் காட்சியும், சமைத்த உணவினைக் கணவனுக்கு இட்டு மகிழும் காட்சியும் எழுதப்பட்டுள்ளன.

இச்சுவரின் மற்றொரு பகுதியில் தில்லைப் பொன்னம்பலம் போன்றதொறு மண்டபத்தின் கூரையும், கூத்தப் பெருமான் உருவத்தின் ஒரு பகுதியும் எழுதப்பட்டுள்ளன. அதன் அருகில் ஒரு சிவனடியாரும், மூன்று பெண்களும் கைகூப்பி ஆண்டவனை வணங்கும் காட்சி எழுதப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியே அரசனும் அரசியும் நின்று கொண்டிருக்கின்றனர். மற்றும் நான்கு பெண்களும், ஆறு ஆடவர்களும் பக்தியோடு வணங்கும் காட்சிகள் கண்ணைக் கவரும் விதத்தில் வரையப்பட்டுள்ளன. இங்குக் காணப்படும் பெண்ணுருவங்கள் நுண்ணிய கலைச்சிறப்போடு விளங்கு-