பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

களும் உருவங்களுக்கு அழகு தருகின்றன. இங்குக் காணப்படும் குதிரையிலும் யானையிலும் கூட அலங்காரங்களைக் காணலாம். யானையும் குதிரையும் மட்டுமன்றி எருது, மயில் போன்ற விலங்குகளும் பறவைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள ஆண் உருவங்களிலெல்லாம் தாடி காணப்படுகிறது. சோழர் காலச் சிற்பங்களிலும் தாடி காணப்படுவதால், இக்கோலம் சோழர் காலத்தின் பழக்க வழக்கங்களில் ஒன்று போலும். கைதேர்ந்த ஓவியர்களால் வரையப்பட்ட இவை யாவும் அஜந்தாவின் மிகச்சிறந்த ஓவியங்களுடன் ஒப்பிடுவதற்குரியனவென்பதில் சிறிதும் ஐயமில்லை.

இராசராசன் தஞ்சைப் பெரிய கோவிலைத் தன்னுடைய நேரான மேற்பார்வையில் வைத்துக் கொண்டான். அவனுக்குப் பிறகு வந்த மன்னர்களும் அவ்வாறே செய்தனர். இராசராசன் கோவிலுக்கெனப் பேரளவில் நிலங்கள் மானியமாக அளித்தான்; ஆபரணங்கள் வழங்கினான்; நாள் வழிபாடுகளுக்கு வேண்டிய வசதிகளும் செய்து வைத்தான், திருமுறை ஒதுவதற்கென ஒதுவார்களையும், இன்னிசை முழக்குவதற்கென்று இசைக் கலைஞர்களையும்; திருவிழாக் காலங்களில் ஆடல் நிகழ்த்துவதற்கென்று ஆடல் மகளிரையும் அமர்த்தினான். அவர்கட்கு ஆண்டுதோறும் மானியமாக நெல்லும், பொருளும் வழங்கினான். கோவிலின் நடுவிலுள்ள திறந்த வெளியில் ஒரு மேடை அமைந்திருப்பதை இன்றும் காணலாம். அதன் எதிரில் அழகிய ஒரு மண்டபம் உள்ளது. விழாக்-