பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

காலங்களில் ஆடல் மகளிரும் கூத்தரும் அம்மேடையில் ஏறித் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துவர். அரசர் தம் பரிவாரத்தோடு அம்மண்டபத்தில் அமர்ந்து ஆடலைக் கண்டு களிப்பார். இவ்வழக்கம் சரபோஜியின் காலம் வரையில் இருந்து வந்தது. சரபோஜியின் காலத்தில் ‘சரபேந்திர பூபாலக் குறவஞ்சியை’ ஆடல் மகளிர் இம்மேடையில் ஏறி நடித்துக் காட்டுவர்.

தஞ்சை இராசராசேச்சுரம், காலத்தை வென்ற ஒப்பற்ற கலைத்திறனுக்குச் சான்று பகருகிறது. இது கடவுளின் கோவில் மட்டுமன்று; கலையின் பெரிய கோவில் என்றும் கூறலாம். இதனுடைய கோபுரம் தஞ்சையை அணி செய்யும் கலைப் பெரும் ஓவியம்! தஞ்சையின் வரலாற்றுக்கு ஒரு முன்னுரை! எத்தனையோ கோபுரங்கள் மிடுக்குடன் அடுக்கடுக்காய் அமைந்து தமிழகத்தை அலங்கரிக்கின்றன. ஆனால் அழகு வளர்க்கும் கோபுரம் பெரிய கோவில் கோபுரமே. இது தமிழகத்துப் பெருஞ்செல்வம்.

——————————