பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

களாகிய நாம்கூடச் சுவர்க்கம், நரகம் இவற்றில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறோம். இறந்த பிறகு ஒருவன் தான் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப நன்மையோ, தீமையோ வேறொரு உலகில் சென்று அடைவதாக நம்புகிறோம். எகிப்தில் வாழ்ந்த பண்டைய மக்கள், ஒருவன் இறந்த பிறகு அவனுடைய ஆவி வசதியோடு வாழ்வதற்கு வேண்டிய தேவைப் பொருள்களையும் அவன் பிணத்தோடு வைத்துப் புதைப்பது வழக்கம். ஒரு பாரோ மன்னன் இறந்தால் தேர், குதிரை, பல்லக்கு, ஆடை, அணி, அளவற்ற செல்வம் ஆகியவற்றையும் அவனுடன் வைத்துப் புதைப்பார்கள்; செல்வராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்ற முறையில் தேவையான பொருள்களை வைத்துப் புதைப்பார்கள். இவ்வாறு கோடிக்கணக்கான மக்கள் எகிப்து மண்ணில் புதைக்கப்பட்டனர். இக்காரணத்தால் எகிப்து நாட்டில் எந்த இடத்தைத் தோண்டினாலும் பண்டைய நாகரிகச் சின்னங்கள் தென்படுகின்றன.

கிரேக்க நாட்டு வெற்றி வீரனான அலெக்சாந்தரும் உரோம நாட்டுத் தலைவனான சீசரும் எகிப்தை வென்றபொழுது, அந்நாட்டின் நாகரிகச் சின்னங்களைக் கண்டு வியப்படைந்தார்களே யல்லாமல், அவைகளைப்பற்றி ஆராய வேண்டும் என்று எண்ணியதில்லை. ஆனால் பிரெஞ்சு நாட்டுப் பேரரசனான நெப்போலியன் எகிப்து நாட்டின்மீது படையெடுத்துச் சென்றபோது ஆராய்ச்சி-

3