பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37 ஏழையாக இருந்தால் பூமிக்குள் ஓர் உறுதியான கல்லறை அமைத்து, அதற்குள் அவனுடைய உடலைப் வைத்தனர். செல்வர்கள் பெரிய கல்லறைகளை எழுப்பினர். எகிப்து நாட்டை ஆண்ட பாரோ மன்னர்கள் தங்களைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதி வந்தனர். புனிதமான தம் உடலை அழியாமல் காக்கப் பெரிய மலைகளை எழுப்பினர். குடி என்ற பாரோ மன்னன், தான் இறந்தபின் தன் உடலைப் பேணிப் பாதுகாப்பதற்காக எழுப்பிய பிரமிடு குறிப்பிடத்தக்கது. அதைக் கட்ட முப்பது ஆண்டுகள் பிடித்தனவாம். பல்லாயிரக் கணக் கான எகிப்து மக்கள் அப்பணியில் ஈடுபட்டனர். அதைக் கட்டுவதற்கு நிறையப் பொருள் வேண்டு மல்லவா ? அதல்ை தாங்கமுடியாத கொடிய வரிகளை விதித்து நாட்டு மக்களின் செல்வத்தை அவன் உறிஞ்சின்ை. தன்னுடைய உடலையும், செல்வத்தையும் கள்வர் கவர்ந்து செல்லமுடியாத படி மறைவு வழிகளே அதில் அமைத்தான். எகிப்து நாட்டுச் சிற்பிகள் தம் நுண்ணறிவையெல்லாம் பயன்படுத்தி இப்பிரமிடை எழுப்பினர். ஒருவன் இறந்த பிறகு அவன் உடலைச்சுற்றித் திரியும் ஆவிக்கு வாழ்க்கையுண்டு என்று எண்ணிய எகிப்தியர் இவ்வுலகில் வாழும் மக் களுக்கு ஏற்படும் இன்ப துன்பங்கள் ஆவிகளுக்கும் ஏற்படுகின்றன என்று கருதினர். மக்களின் அன்ருட வாழ்க்கைக்குத் தேவையான பொருள் களை யெல்லாம் பிரமிடுகளில் பாரோ மன்னர்கள் வைத்துப் புதைத்தனர். பட்டாடைகள், பொன்