பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 அணிகள், வைர மாலைகள் போன்ற ஆடம்பரப் பொருள்களேயும் வைத்துப் புதைத்தனர். அரச னுடைய ஆவி அமர்ந்து களேப்பாற அரியணையும், படுத்துறங்கப் பஞ்சணையும் உடன் வைத்தனர். இன்னும் வேறு தேவைப் பொருள்களான ஆடு, மாடு, குதிரை, தானியம், பொன் ஆகியவற்றையும் உடன் வைத்து மூடினர். அரசனின் பிரிவைத் தரங்கமுடியாத நெருங்கிய உறவினரும், கணவன் ஆவியோடு இன்பவாழ்வு நடத்த விரும்பிய மனைவியரும், அறிவுரை கூறும் அமைச்சரும்கூடப் பிரமிடுகளில் வைத்து மூடப்பட்டனர். ஒவ்வொரு பிரமிடுக்குக் கிழக்கிலும் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவில்கள் பிரமிடுகளைவிடப் புனிதமான இடங்களாகக் கருதப் பட்டன. உலகில் வாழும் ஒரு மனிதன் பசியால் வாடுவது போலவே, ஆவிகளும் வாடுகின்றன என்று எகிப்தியர் கருதினர். எனவே நாள்தோறும் மூன்று வேளேயும், அறுசுவை உண்டியை அக் கோவில்களில் வைத்துப் படைப்பர். இறந்தவரின் ஆவி அவ்வுணவை ஏற்றுக்கொள்கிறது என்று: நம்பினர். ஒவ்வோர் எகிப்திய மன்னனும் தான் இறப்பதற்கு முன்பாகவே, தன் உடலைப் பாதுகாப்ப தற்கு வேண்டிய பிரமிடையும், அதன் கிழக்கில் ஒரு கோவிலையும் எழுப்பிவிடுவது வழக்கம்; அத னுடன் தனக்குரிய விளைநிலத்தின் ஒரு பகுதியை, அக்கோவிலுக்கு எழுதிவைப்பான்; அந்நிலத்தில் விளையும் தானியங்களைக்கொண்டு, இறந்த பிறகு தன் ஆவிக்கு உணவு படைக்க வேண்டும் என்று