பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

அவன் விரும்பினான்; இச்செயலைப் பொறுப்பாகச் செய்ய ஒரு பணியாளையும் அமர்த்திவிடுவான். அப்பணியாளும், அவன் பரம்பரையினரும் இப்பணியைத் தப்பாமல் செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

பாரோ மன்னர்களின் பிரமிடுகளை அடுத்தாற் போல் அவர்களுடைய அமைச்சர் பிரதானியர் முதலியோரின் சமாதிகளும் எழுப்பப்பட்டுள்ளன. இவைகள் உருவத்தால் பிரமிடுகளை ஒத்திருந்தாலும் அளவால் சிறியவை. இச்சமாதிகளின் உள்ளே நுழைந்து பார்த்தால், சுவர்களில் அழகான வண்ண ஓவியங்களைக் காணலாம். அவ்வோவியங்கள் நாட்டுப்புற வாழ்க்கையை விளக்குவனவாகக் காட்சியளிக்கின்றன. நிலத்தை உழுதல், பண்படுத்தல், விதை விதைத்தல், பயிர் வளர்த்தல், தானியங்களை அறுத்தல், அடித்தல் போன்ற படங்களும், உணவு சமைப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன. ஆடு, கோழி போன்ற உயிரினங்களை வளர்ப்பது போலவும், அவற்றைக் கொன்று உணவு சமைப்பது போலவும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவற்றைக் காணும்போது புதிய உண்மை ஒன்றும் புலப்படுகிறது. இறந்தவர்களின் ஆவி, சுவரில் தீட்டப்பட்டுள்ள இவ்வுணவுப் பண்டங்களைக் கண்ணால் பார்த்தாவது தம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாமன்றோ ?

எகிப்தியர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டடக் கலையில் வல்லவர்களாக விளங்-