பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை கலை என்பது மக்கள் உள்ளத்தின் அரிய கண்டுபிடிப்பு. உணர்ச்சிகளின் நுண்ணுருவம். இசை, ஓவியம், சிற்பம், ஆடல், இலக்கியம் ஆகிய யாவும் நுண்கலகள். கட்டடக் கலையும் இவற்ருேடு ஒப்பவைத்துப் போற்றத் தக்க சிறப் பினை உடையது. இக்கலைகள் யாவும், ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சிக் கேற்பத் தாமும் வளர்ந்து சிறப்புறுகின்றன. இக் கட்டடக்கலை நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் வேறு பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வோரினத்தாரும் தங்களுக் கெனத் தனித்தன்மை பெற்ற ஒவ்வொரு கட்டடக் கலையை வளர்த்து வந்திருக்கின்றனர். அக் கலையார்வத்தின் காரண மாக உலகம் போற்றும் உயரிய கலைக் கோவில்கள் பல உருப் பெற்றன. அவைகள் காலத்தை வென்று தத்தம் கலைச் சிறப்பைப் பறை சாற்றிய வண்ணம் இன்றும் செம்மாந்து நிற்கின்றன. அவற்றுள் ஒரு சில கட்டடங்களைப் பற்றியும், அவை தோன்றிய கதைகள் பற்றியும், இந்நூலில் சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறேன். இருபதாம் நூற்ருண்டில் கட்டடக் கலே அடைந்துள்ள வியக்கத்தக்க வளர்ச்சியைப் பற்றிப் பல அரிய கருத்துக்களை எடுத்துக் கூறி, இந்நூல் சிறப்புற அமைவதற்குப் பெரிதும் துணை புரிந்தவர், எனது கெழுதகை நண்பரான திரு K. L. அண்ணுசாமி B. E. அவர்கள். அன்னுருக்கும், இந்நூல் சிறந்த முறையில் அச்சேற உடனிருந்து பணியாற்றிய புலவர் பு. செல்வராசனர் அவர்கட்கும், இந்நூலே வெளியிட்ட சிவலிங்க நூற்பதிப்புக் கழகத்தார்க்கும் என் உளங் கலந்த நன்றி. கவிதைப் பண்ணை இங்ங்ணம் 1 0-10-63 } முருகு சுந்தரம்.