பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

மக்கள் மாடுகளைப்போல் உழைத்தனர். மன்னர்களோ மக்களை இப்பணியில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தினர். மன்னனின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கட்டடப் பணியை மேற்பார்வை செய்த அரசாங்க அதிகாரிகள் மிலாறினால் கூலிகளை அடித்துத் துன்புறுத்தினர். ஒரு தனி மனிதன் விருப்பத்திற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குருதியை வடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுவீடன் நாட்டில் ஆல்பிரெட் நோபெல் என்ற விஞ்ஞானி தோன்றி, வெடி மருந்து கண்டுபிடித்தார் என்று நாம் படித்திருக்கிறோம். அவ்வெடி மருந்தின் துணை கொண்டு இக்காலத்தில் பெரும் பெரும் பாறைகளைப் பிளந்து தூளாக்கிவிடுகிறோம். பண்டைக் காலத்தில் எகிப்து நாட்டில் இதுபோன்ற வாய்ப்பு ஒன்றுமில்லை. அவர்கள் பெரும் பாறைகளைப் பிளப்பதற்கு மிகவும் எளிய ஒரு முறையைக் கையாண்டனர். எந்தப் பாறையைப் பிளக்க வேண்டுமோ அப்பாறையில் துளையிடுவர். அத்துளையில் மர ஆப்புகளைச் சீவி உறுதியாக அடிப்பர். பிறகு நாள்தோறும் அவ்வாப்பில் தண்ணீர் விடுவர். அவ்வாப்பு நீரில் ஊறிச் சிறிது சிறிதாகப் பருக்கும். ஆப்புப் பருக்கத் தொடங்கியதும் பாறையில் பிளவு ஏற்படும். பிறகு தங்களுக்குத் தேவையான அளவு கற்களைப் பிளந்து எடுத்துச் செல்லுவர்.

கற்களோடு போராடுவதே பண்டை எகிப்தியரின் வாழ்க்கையாக இருந்த காரணத்தால் பெரும்