பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தங்களுடைய ஆவிகளை வழிபடுவதற்காகவும், அவைகளுக்கு உணவு படைப்பதற்காகவும் பெரிய கோவில்களைத் தலைநகருக்கருகில் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும்படி அமைத்தனர்; பிணத் தையும், செல்வத்தையும் ஒருவர் கண்ணுக்கும் தெரியாதபடி தலைநகருக்கு வடக்கே நெடுத் தொலைவில் அமைந்திருந்த ஒரு பள்ளத்தாக்கில் புதைத்தனர். இ வ் வா று செய்வதைப் பாரோ மன்னர்கள் முதலில் தொல்லையாகக் கருதினர்; இறந்தவரின் ஆவி உணவின் பொருட்டு நாள் தோறும் நெடுந்தொலைவு பயணம் செய்ய: வேண்டுமே என்று எண்ணி வருந்தினர்; இதல்ை முதலில் சிறிது தயக்கம் கூடக் கொண்டனர். ஆல்ை வேறு வழியில்லை. இறந்தவரோடு அள வற்ற செல்வத்தைப் புதைக்கும் வழக்கத்தைவிட்டு விட்டால், கள்வர்களும் தங்கள் தீச் செயலே. விட்டுவிடுவர். ஆனல் செல்வத்தைப் புதைக்காம லிருப்பதென்பது அவர்களால் முடியாத செயல். கி. மு. 1500 ஆம் ஆண்டிலிருந்து பாரோ மன்னர்கள் இப்புதிய பழக்கத்தை மேற்கொண் டனர்; ஐந்நூறு ஆண்டுகள் தொடர்ந்து இவ்வாறு செய்தனர். முப்பது பாரோ மன்னர்களின் பிணங்’ கள், அளவற்ற பெருஞ்செல்வத்தோடு இப்பள்ளத். தாக்கில் புதைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு இவ்வுண்மை தெரியாதவாறு மறைக்கப் பாரோ மன்னர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனல் எப்படியோ இவ்வுண்மை வெளியாகி விட்டது. இறந்த மன்னர்களின் பிணங்களை அடக்