பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 மூடியைக் கழற்றினுேம். அதில் இறந்த மன்னரின் பிணம் காணப்பட்டது. மன்னரின் முகம் தங்க முக மூடியால் போர்த்தப்பட்டிருந்தது. உடல் வெள்ளித் தகட்டினுல் போர்த்தப்பட்டிருந்தது. வெள்ளித் தகட்டின்மேல் தங்கத் தகடு போர்த்தப் பட்டிருந்தது. தங்கத்தகட்டில் விலைமதிப்பற்ற மாணிக்கக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. கழுத் தில் பொன்னரி மாலைகள் பல பூட்டப்பட்டிருந் தன. அம்மாலேகளை முதலில் கழற்றிளுேம். தங்கத் தகட்டின்மேல் பதிக்கப்பெற்றிருந்த மாணிக்கக் கற்களைப் பெயர்த் தெடுத்தோம். பிறகு உடலே ஒட்டிக்கிடந்த வெள்ளியையும் தங்கத்தையும் பெயர்த்தெடுத்தோம். அரசரின் பிணத்திற்கருகில் அரசியாரின் பிணம் காணப்பட்டது. அதன் கழுத் திலும் தங்கச் சரங்கள் நிறையப் பூட்டப்பட்டிருந் தன. அரசருடைய உடலுக்குப் போர்த்தப்பட் டிருந்தாற்போல், அரசியாரின் உடலுக்கும் தங்கத் திலுைம், வெள்ளியிலுைமான தகடுகள் போர்த்தப் பட்டிருந்தன. அவைகளையும் நாங்கள் எடுத்துக் கொண்டோம். இவ்விரண்டு பிணங்களுக்கும் அருகில் தங்கத்தாலும் வெள்ளியிலுைம் செய்யப் பட்ட பலவிதப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அவைகளும் எங்களால் களவாடப்பட்டன. பிறகு களவாடிய பொருள்களை எட்டுப் பங்காகப் பிரித்து ஆளுக்கொரு பங்கு வைத்துக் கொண்டோம்.” இவ்வாறு தன் கொள்ளையைப்பற்றி விளக்க மாகக் கூறினன் பீரோ. பீரோ கூறிய செய்திகளி லிருந்து நாம் பல உண்மைகளை அறிந்து கொள்ள