பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பல பகுதிகளிலுமுள்ள பொருட்காட்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.

இனிப் பிரமிடுகளின் உட்பகுதிகளில் என்னென்ன பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதைக் காண்போம். பிரமிடுகளை ஆராய்ந்த ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர் பின்கண்டவாறு குறிப்பிடுகின்றார்:

“நான் பல நாள் முயன்று வழிகண்டுபிடித்தேன் ; பிரமிடின் அடித்தளத்தை அடைந்தேன். அங்கு ஒரே இருட்டாக இருந்தது. காற்று மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் என்னுடைய உடலெங்கும் எரிச்சலெடுத்தது. கையில் கொண்டு சென்ற மின்விளக்கை ஏற்றினேன். நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. என் எதிரில் தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட பொருள்கள் குவிந்து கிடந்தன. ஒரு பொருட் காட்சி நிலையமே என் எதிரில் இருப்பதாக உணர்ந்தேன். அங்கிருந்தவற்றில் என் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த பொருள்கள் மூன்று. ஒன்று, தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளித்தேர். அத்தேரின் கலையழகு என்னை மெய்ம்மறக்கச் செய்தது. தேரின் இரண்டு பக்கங்களிலும் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உட்புறத்தில் பெரிய விலங்குகளின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டிருந்தன.

“மற்ற இரண்டு பொருள்கள், அப்பிரமிடில் புதைக்கப்பட்டிருந்த மன்னனின் சிலைகளாகும். அவைகளும் வெள்ளியினால் செய்யப்பட்டு மேலே