பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

தங்க முலாம் பூசப்பட்டவை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாரோ மன்னன் உயிரோடு எழுந்து நடமாடுவதுபோல என் கண்களுக்குப் பட்டது. “இப்பொருள்களேயன்றி, வைரக்கற்கள் நிரப்பப்பட்ட பொற்பேழைகளும், பளிங்கினால் செய்யப்பட்ட பூந்தொட்டிகளும், பளிங்குப் பலி பீடமும், தந்த நாற்காலிகளும், கட்டில்களும், பொன்னாலான அரியணையும், வெண்மையான தந்தப் பெட்டிகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தன” என்று எழுதியிருக்கிறார்.

இப்பிரமிடுகளின் துணைகொண்டு, பண்டைய எகிப்து நாகரிகமும், மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையும் எப்படியிருந்தன என்பதை ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

எகிப்து நாட்டை ஆண்ட பாரோ மன்னர்கள் வளர்த்த நாகரிகம் மிகவும் தொன்மையானது. அவர்கள் வளர்த்த அழகுக் கலைகள் மிகவும் உயர்ந்தவை. இம்மன்னர்கள் ஆடம்பரமான வாழ்க்கையைப் பெரிதும் விரும்பினர். அழகைக் கடவுளாக வழிபட்டனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் அளவால் பெரியவை. இவ்வரண்மனையின் வெளிச்சுவர்கள் கரடுமுரடான செங்கற்களால் கட்டப்பட்டவை. உட்சுவர்கள் மழமழப்பான கற்களால் கட்டப்பட்டவை. அச்சுவர்கள் கலையழகோடு காட்சியளித்தன. கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள் அச்சுவர்களில் வரையப்பட்டிருந்தன.

அரண்மனையின் மேற் கூரையைத் தாங்கி நிற்பதற்காகப் பெரிய தூண்கள் வரிசையாக அமைக்-

4