பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


53 லும் மழையிலும் அவர்கள் சலியாமல் உழைக்க வேண்டியவர்களானர்கள். கல்லே அடித்து அடித்து அவர்கள் கை ஓய்ந்துவிடும். இடையிடையே மாபெருங் கற்களைப் பலர் கூடி ஓரிடத்திலிருந்து மற். ருேரிடத்திற்கு இழுத்துச் செல்லவேண்டும்; பெருந் தூண்களை எடுத்து நிறுத்தி நிலைநாட்ட வேண்டும்; மாபெரும் கற்பாலங்களைக் கூரைமேல் ஏற்றவேண் டும். இவ்வேலைகளைச் செய்யும்போது கற்களின் அடியிற்சிக்கி எத்தனையோ தொழிலாளர்கள் மடிய நேரிடும். இவ்வாறு நாள் முழுவதும் உழைத்து, மாலை வேளையில் அரசாங்க அதிகாரிகள் கொடுக் கும் ரொட்டித் துண்டுகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். வீட்டில் மனைவி மக்கள் இவ்வேழையின் வருகையை எதிர் நோக்கி இருப்பர். - ‘ அரச குடும்பத்தார்க்கு ஆடை நெய்யும் சேணியர்களின் நிலை மிகவும் மோசமானது. காலையிலிருந்து மாலவரை காலை மடக்கி உட் கார்ந்து வேலை செய்யவேண்டும். இடை வேளைக் குள் குறிப்பிட்ட அளவு ஆடை நெய்தால்தான், அவர்களுக்கு உணவுண்டு. இல்லாவிட்டால் அவ் வேலை முடிந்த பிறகுதான் உணவு கொடுப்பார்கள். சாயப்பட்டறையில் வேலைசெய்யும் தொழிலாளர் நிலை இன்னும் கேவலமானது. சாயத்தண்ணிரின் நாற்றம் மூக்கைத் துளைக்கும். நாள் முழுவதும் தண்ணிருக்குள் கையைவிட்டு நூலையும், ஆடை யையும் பிழிந்து கொண்டிருப்பதால், அவர் களுடைய கைகளில் குருதியோட்டமே நின்று விடும். செருப்புத் தைக்கும் தொழிலாளர்களின் நிலை