பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

1648 ஆம் ஆண்டு முற்றுப் பெற்றது. ஷாஜகான், தம் அன்பு மனைவியின் நினைவாக அமைக்கப்படும் இவ்வழகுச் சமாதி ஈடும் எடுப்புமற்றதாக விளங்க வேண்டும் என்று எண்ணினர். இக்கட்டடம் கட்டப்பட்டதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.

இக்கட்டடம் எழுப்புவதற்கு முன், இதன் அமைப்பை விளக்கும் சிறந்த கிடைப்படத்தை வரைந்து கொண்டு வருபவருக்குப் பெரும் பொருள் பரிசுகொடுப்பதாக ஷாஜகான் பறையறைந்தாராம். அப்போது ஷாஜகானுடைய அரசவையில் இருந்த வெனிசு நாட்டுக்காரர் ஒருவர் தாஜ்மகாலின் கிடைப்படத்தை வரைந்து கொடுத்தாரென்றும், அப்படத்தை வைத்துக் கொண்டு அவ்வமைப்பின் படி இக்கட்டடம் எழுப்பப்பட்டதென்றும் சொல்லுகின்றனர்.

இக்கதையைச் சான்று காட்டிப் பேசுபவரெல்லாம் மேலை நாட்டினரே. ஆனால் இக்கதை நம்பத்தகுந்ததாக இல்லை. காரணம், இசுலாமியக் கட்டடக் கலையின் வளர்ச்சி பெற்ற நிலையைத்தான் தாஜ்மகாலில் காண முடியுமே தவிர, மேலை நாட்டுக் கட்டடக் கலையின் சிறு சாயலைக்கூட இதில் காண முடியாது.

தாஜ்மகால் எழுந்த வரலாற்றைப் பற்றி வேறொரு கதையும் வழங்குகிறது. இக்கட்டடம் அமைப்பதற்கான கிடைப்படத்தை முதலில் தீட்டிக் கொடுத்தவன் உஸ்தாத் ஈசா என்ற இசுலாமியன். இவன் பாரசீக நாட்டைச் சேர்ந்தவன். இவன்