பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வழியின் இரண்டு பக்கங்களிலும் இயற்கையழகும், செயற்கையழகும் கூடிய மரங்களும் செடிகளும் வரிசையாக வளர்ந்துள்ளன. இப்பாதையில் நடந்து போகும் போது ஏதோ ஒரு கனவுலகில் மிதந்து செல்வது போலத்தோன்றும். இக்காட்சி கவிஞரின் கற்பனையைத் தூண்டும்; சிற்பியின் சிந்தனைக்கு விருந்தளிக்கும்; ஓவியனின் உள்ளத்தில் உணர்ச்சியைத் தூண்டிவிடும்.

இதைக்காணும் மக்களெல்லாரும், “இது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட செயல்; உயர்ந்த கவிஞனின் கற்பனைக்கு, ஒப்பற்ற சிற்பியொருவன் உயிரூட்டியிருக்கிறான்! ஷாஜகான் தம் மனைவியின் பால் எத்தகைய அன்பு கொண்டிருந்தாரோ? அவர் கொண்டிருந்த அன்புக்கு எல்லை இருந்திருக்க முடியாது. இல்லாவிட்டால் அவள் நினைவுச் சின்னமாக, உலக விந்தை ஒன்றை உருப்படுத்தியிருப்பாரா? இச்சமாதியே இவ்வளவு பேரழகோடிருந்தால், இங்குப் புதைக்கப்பட்ட மும்தாஜ் எத்துணை அழகியோ! இனி உலகில் எவராலும் இது போன்ற கலைக் கோவிலை எழுப்ப முடியாது; இந்திய நாட்டின் கலைப் புகழுக்கு இதுதான் எடுத்துக் காட்டு!” என்றெல்லாம் வியந்து பேசுவதைக் காதாரக் கேட்கலாம்.

கலப்பில்லாத உயர்ந்த சலவைக் கற்களால் எழுப்பப்பட்டுள்ள இக்கலைக் கோவிலை, முழு நிலா வானத்தில் ஆட்சி செலுத்தும் இரவு நேரத்தில் பார்த்து மகிழவேண்டும். அப்பொழுது தான் அதன் சிறப்பு நமக்குத் தெரியும். தாஜ்மகாலைக் கட்டி