பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 வைரம் முதலிய நவமணிகளும் பதிக்கப் பட்டிருந் தன. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, உயர்ந்த வைரக்கற்களெல்லாம் பெயர்த்து எடுக்கப் பட்டுவிட்டன. அவ்விடங்களில் போலி வைரங் களே இப்பொழுது மின்னுகின்றன. தாஜ்மகாலின் சிறப்பை இந்திய மக்களைவிட மேலைநாட்டு மக்கள் மிகவும் உணர்ந்திருக் கின்றனர். ஆக்ராவைப் பற்றியும், தாஜ்மகாலைப் பற்றியும் ஐரோப்பியர்களே சிறந்த நூல்கள் எழுதி யுள்ளனர்; அந்நூல்களில் தாஜ்மகாலின் சிறப்பை அணு அனுவாகச் சுவைத்து எழுதியிருக்கின்றனர். 17 ஆம் நூற்ருண்டிலிருந்து, தாஜ்மகாலேப்பற்றிப் பல நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் எழுந்த வண்ணம் உள்ளன. தாஜ்மகாலே நேரில் கண்ட பெரினியர் என்ற பிரெஞ்சுக்காரர், அக்கலைக் கோவிலைக் கண்ட போது நான் ஓர் இந்தியனுகவே மாறிவிட்டேன். தாஜ்மகால் உலக விந்தைகளில் ஒன்று என்று எல்லாரும் சொல்லுகிருர்கள். நான் கூறுகின்றேன்! அது உலக விந்தைகளில் தலைசிறந்தது!” என்று மெய்ம்மறந்து கூறுகிருர். ஹீபர் என்ற பாதிரியார், 'தாஜ்மகாலில் சிற்பக்கலை நுணுக்கம் காணப் படாத இடமே இல்லை. ஐரோப்பியக் கட்டடக் கலைக்கு இஃது ஒர் அறைகூவல்!” என்று வியந்து பாராட்டுகிருர். தாஜ்மகாலேக் க ண் டு பொருமைப்பட்ட வெள்ளேயர்களும் உண்டு. தங்களுடைய நாட்டில் இத்தகைய கலைக்கோவில் இல்லையே என்ற