பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 வெடிப்பை உண்டாக்குகிறது. இக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இருப்புக் கப்புகள் துருப் பிடிப்பதாலும் கற்களில் வெடிப்புகள் ஏற்படுகின் றன. வெடித்த இச் சலவைக் கற்களை அகற்றி விட்டுக் குற்றமற்ற தூய பளிங்குக் கற்களே அவ் விடத்தில் பொருத்திப் பழுது பார்க்கின்றனர். கற் களைப் பொருத்துவதற்காகப் புதுவிதச் சுண்ணும்புக் கலவையைப் பயன்படுத்துகின்றனர். சலவைக் கல்லைத் துTளாக்கி எரித்து, அந்த எரிபொருளைக் கொண்டு இச் சாந்து செய்கின்றனர். இச் சாந்தில் போதிய அளவு இளக்கம் ஏற்படுவதற்காக ரூமிமஸ்தகி என்ற ஒருவகைக் கோந்தையும், பதாசா என்ற வெல்லப் பாகையும், பேல்கரி என்ற ஒரு வகைக் கொடியின் சோற்றையும் கலக்கின்றனர். கட்டடக் கலை பற்றிய இந் நுணுக்கம் பண்டைய நூல்களில் விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது. இம் முறையைப் பயன்படுத்துவதல்ை கட்டட அமைப் பிற்குள் எந்த விதமான மாசு மறுவோ, கேடு தரும் பொருளோ புகுந்து கட்டடத்தைச் சீர்குலைத்து விடாமல் காக்க முடிகிறது. கி. பி. 1874 இல் தாஜ்மகாலின் விமானத் (dome)திலும், அதைத் தாங்கும் கழுத்தி (drum) லும் பல கற்கள் வெடித்துப் பழுது நேர்ந்தது. விமானத்தின் அமைப்புச் சீர்குலைந்து விட்டதோ என்று கட்டடக் கலைஞர்கள் ஐயுற்றனர். விமானத் தின் மேற்புறத்தில் பதிக்கப் பெற்றிருந்த சில பளிங்குக் கற்களில் வெடிப்பு ஏற்பட்டது. அவ் வெடிப்புகள் வழியாக மழைநீர் உள்ளே இறங்கி