பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஊறிச் சொட்டுச் சொட்டாக உள்ளே விழத்தொடங்கியது. அவ்வாறு சொட்டும் மழைநீர் மும்தாஜின் கல்லறைமேல் விழத் தொடங்கியது. இக் காட்சியைக் கண்ட மக்கள் ஷாஜகான், வடிக்கும் கண்ணீரே மும்தாஜின் கல்லறை மேல் விழுவதாகப் பேசிக் கொண்டனர். கட்டடக் கலைஞர்கள் இவ்விமானத்தை நன்கு ஆராய்ந்தனர். மழை நீரில் ஊறிய காரணத்தால், விமானத்தின் ஒரு பகுதி உப்பேறி வலுவற்றிருந்தது. இவ்வுப்பை அகற்றுவதற்காகக் கட்டடக் கலைஞர்கள் புதிய முறை ஒன்றைக் கையாண்டனர். பத்துப் பங்கு மணலும், ஒரு பங்கு சிமெண்டும் கொண்ட சத்துக் குறைந்த கலவையை விமானத்தின் உட்புறத்தில் பூசினர். இக் கலவை உப்பை உறிஞ்சும் ஆற்றல் பெற்றது இதைப் பன்முறை மாற்றி மாற்றிப் பூசி விமானத்திலுள்ள உப்பை எடுத்துவிட்டனர். பிறகு வலிமையான சிமெண்டுக் கலவையால் உட்பக்கத்தைப் பழுது பார்த்தனர். விமானம் மீண்டும் உறுதி பெற்றுவிட்டது.

அளவில் மிகப் பெரிதாக இருக்குமொரு கட்டடம் பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்னும், தன்னுடைய கடைக்கால் சிறிதும் தளராமல் இருப்பது. வியப்பிற்குரியதல்லவா? எனவே நம் நாடு விடுதலை பெற்ற ஆண்டாகிய கி.பி. 1947 இல் நம் நாட்டுக் கட்டடக் கலை வல்லுநர்கள் இதன் கடைக்காலை ஆராய விரும்பினர்; கடைக்காலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடைக்கால் பரப்பிலும் நூற்று நான்கு அடையாளக் குறிகளை (bench