பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

marks) அமைத்து அவற்றின் மட்டத்தைக் குறித்துக் கொண்டனர்; திரும்பவும் இதே சோதனைகளைக் கி. பி. 1953 ஆம் ஆண்டிலும், 1958 ஆம் ஆண்டிலும் செய்தனர்; கி. பி. 1952 ஆம் ஆண்டில் இதன் கடைக்கால் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இன்றும் சிறிதுகூட மாறாமல், தளராமல் இருப்பதைக் கண்டறிந்தனர்; மேலும் இக் கட்டடத்தின் நாற்புறங்களிலும் உள்ள கூம்புக் கோபுரங்களும் (Minarets) தம் நிலையிலிருந்து சாயாமல் இருக்கின்றனவா என்றும் ஆராய்ந்து தெளிந்தனர்.

காலப் போக்கில் எவ்வளவு உயர்ந்த கட்டடத்திலும் வெடிப்புகள் தோன்றுவது இயற்கையே. தட்ப வெப்ப நிலையால் தாஜ்மகாலில் தோன்றும் சிறு வெடிப்புகள் மேலும் விரிகின்றனவா என்பதை மெல்லிய கண்ணாடித் துண்டுகளை அவ் வெடிப்புகளில் ஒட்டி ஆராய்கின்றனர். வெடிப்பு மேலும் விரிந்தால் இக் கண்ணாடித் துண்டுகள் உடைந்து விடும். இவ்வாறு இருநூற்று நாற்பத்தொன்பது கண்ணாடித் துண்டுகளைப் பொருத்தித் தாஜ்மகாலின் வெடிப்புகளே ஆராய்ந்தனர். ஒரு துண்டு கூட உடையவில்லை. இதனால் வெடிப்புகளில் நெகிழ்ச்சி ஏற்படவில்லை என்பது புலனாகிறது.

இவ்வாறு பல்லாற்றானும் ஆராய்ந்து தாஜ்மகாலின் உறுதியை நம் நாட்டுக் கட்டடக் கலை வல்லுநர்கள் உறுதி செய்திருக்கின்றனர்; இன்னும் ஆயிரம் ஆண்டானாலும் இதைச் சிதையாமல் காப்பாற்ற முடியும் என்று நம்புகின்றனர்.