பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


71 யிருக்கவேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆளுல் அதன் உண்மைக் காரணம் என்ன வென் பதை ஈண்டு ஆய்வோம். -- இசுலாமிய சமயம் காலத்தால் பிற்பட்டது. இது கி. பி. ஏழாம் நூற்ருண்டில் அரேபிய நாட் டில் நபிநாயகத்தினுல் தோற்றுவிக்கப்பட்ட்து. பாலைநிலத்தில் நாடோடிகளாகத் திரிந்த அராபிய மக்களை இச்சமயம் ஒன்று சேர்த்தது; நாகரிகத் தையும் பண்பாட்டையும் வளர்த்து வலிவுள்ள இனமாக அவர்களை மாற்றியமைத்தது. புதிய சமயத்தால் ஒன்ருக இணைந்த அம்மக்கள் புத் துணர்ச்சி பெற்றனர். மிக விரைவில் தங்கள் சம யத்தை ஆசிய நாட்டின் மேற்குப் பகுதியில் பரப்பி விட்டனர். சமயத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத் தோடு, புதுநாடுகளைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்ற பேர வ்ா வும் அராபியரைப் பிடர் பிடித்துத் தள்ளியது. மாபெரும் வீரர்களும், அரசியல் தலைவர்களும் அவர்களிடையே தோன் றினர். புயல்போல அவர்கள் நாற்புறமும் சீறி எழுந்தனர். வலிமைமிக்க அவர்கள் வாள் வீச் சுக்கு முன்னல் மணி முடிகள் உருண்டு மண்ணில் விழுந்தன. கொடி கட்டி ஆண்ட மாபெரும் பேரரசுகளெல்லாம் மண்மேடாயின. பாரசீகம், ஆப்கானிஸ்தானம், துருக்கிஸ்தானம், துருக்கி, வடஆப்ரிக்கா முதலிய நாடுகள் அவர்கள் காலடி யில் சரணடைந்தன. ஏறத்தாழ ஐரோப்பாவின் பெரும் பகுதி இவர்கள் குதிரைக் குளம்படியில் கும்பிட்டுப் பணிந்தன.